நயன்தாரா படம் பற்றிய முக்கிய தகவலை வெளியிட்ட அனிருத்
தற்போது ஹீரோக்களுக்கு நிகராக சோலோவாக கலக்கிவருபவர் நயன்தாரா. நடிகைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து அவர் நடித்துவருகிறார்.
நயன்தாரா நடிப்பில் அடுத்து கோலமாவு கோகிலா என்ற படம் உருவாகிவருகிறது. அந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.
கோலமாவு கோகிலா படத்தை பார்த்த அனிருத் அது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அது மட்டுமின்றி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் சிங்கில் அடுத்த வாரம் வெளியாகும் என்ற அறிவிப்பையும் அனிருத் வெளியிட்டுள்ளார்.
No comments