1.5 லட்சம் ரூபாய் விவசாயத்தில் சம்பாதிக்கும் கார்த்தி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தீரன் வெற்றிக்கு பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
விவசாயம் சம்பந்தப்பட்ட இந்த கதையில் கார்த்தி கெத்தாக விவசாயத்தில் ரூ. 1.5 லட்சம் சம்பாதிக்கும் இளைஞராக நடிக்கிறாராம். ஏற்கனவே சில இளைஞர்கள் ஐடி வேலையை விட்டு விவசாயத்தில் இறங்குகின்றனர். இந்த படத்திற்கு பிறகு இந்த எண்ணிக்கை அதிகரிக்குமாம்.
இப்படத்தில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர், சாயிஷா நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யராஜ், மவுனிகா, அர்த்தனா, யுவராணி என பலர் நடிக்கின்றனர்.
No comments