Header Ads

Header ADS

டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக நடிகர் சிவா


 நடிகர் மிர்ச்சி சிவா புதிதாகத் தமிழில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகியிருக்கிறார். ரேடியோ ஜாக்கி, நடிகர் என வளர்ந்ததைத் தொடர்ந்து தற்போது, சின்னத்திரை தொகுப்பாளராக புது அவதாரம் எடுத்திருக்கிறார் மிர்ச்சி சிவா. கலர்ஸ் டிவி-யில் குழந்தைகள் பங்குபெறும் 'கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்' எனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் சிவா.

வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 28' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மிர்ச்சி சிவா. அதன் பிறகு சரோஜா, தமிழ்ப்படம், வ குவார்ட்டர் கட்டிங், கலகலப்பு, தில்லுமுல்லு, வணக்கம் சென்னை உள்பட பல படங்களில் நடித்தார்.

சிவாவின் கிண்டலான பேச்சுக்கே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. மிர்ச்சி எஃப்.எம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானதால் மிர்ச்சி சிவா என்றே அழைக்கப்படுகிறார். 'அகில உலக சூப்பர்ஸ்டார்' எனும் பட்டத்தையும் தனதாகக் கொண்டவர்.



இந்த நிலையில் இவர் தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராக மறு அவதாரம் எடுத்திருக்கிறார். சமீபத்தில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ் டிவி-யில் கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் சிவா.


இதுவரை யாரும் காணாத ஒரு நிகழ்ச்சியாக இது இருக்குமாம். ஷோவிற்கு கொண்டு வரும் திறமையான குழந்தைகள் உலக அளவில் கண்டறியப்படுவார்களாம். 



குழந்தைகளின் தன்னம்பிக்கையை பாதிக்கும் மதிப்பெண் கொடுப்பது மற்றும் நீக்குதல் என்ற விஷயமே இந்த ஷோவில் கிடையாதாம். RELATED ARTICLES மிர்ச்சி சிவா- பாபி சிம்ஹா நடிக்கும் மசாலா படம் மதுரையில் தொடங்கிய சிவி குமாரின் 11வது படம் 144! ரோடு ரோடா பெண்களை சுத்தவிடும் ஆர்யா... 


சைக்கிளிங் டாஸ்க் பரிதாபம்! என்னது, விஜய் டிவி கையை விட்டு போகும் 'பிக் பாஸ்'? 'இந்த வேலைக்கு காசு வேற தராங்க...' - ஆர்யா நிகழ்ச்சியைக் கலாய்த்த சதீஷ்! ஆர்யாவை மரண பங்கமாக கலாய்க்கும் வீடியோ மீம்... செம வைரல்! கலர்ஸ் மூலமா பொண்ணு தேடும் ஆர்யா... நிஜமாவே கல்யாணம் பண்ணிப்பாரா? இனி நைட்டானால் ஆர்யா உங்க வீட்டுக்கு வருவார் "சூப்பர் கிங்ஸ்" போனா என்ன.. 

"ஸ்வாகர்ஸ் ராணி" வந்து விட்டார்!! இரவு 9 மணிக்கு பிக் பாஸ்-ஐ ஒளிபரப்ப அனுமதி எம்.ஜி.ஆர் இருந்திருந்தால்... "இச்" கொடுத்திருக்கமாட்டார், உதை தான் கொடுத்திருப்பார்: பவர்ஸ்டார் அலும்பு தாங்கலையே மச்சான்... பவர்ஸ்டாரின் கன்னத்தில் ‘இச்’ கொடுத்த எம்.ஜி.ஆர்!! பந்தா இல்லாதவர் நடிகர் சிவா: துபாய் தமிழர்கள் பாராட்டு 



No comments

Powered by Blogger.