Header Ads

Header ADS

2.0 படத்தின் வில்லனுக்கு வந்த சோதனை


2.0 படத்தின் வில்லனாக நடித்திருப்பவர் பிரபல நடிகர் அக்‌ஷய் குமார். இவரின் நடிப்பில் நேற்று முன் தினம் வெளியாகி வசூல் சாதனையை அள்ளி வரும் படம் பேட் மேன்.
இதில் அக்‌ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் என பலர் நடிக்க பிரபல இயக்குனர் பால்கி படத்தை இயக்கியுள்ளார். பெண்களின் சுகாதாரம் பற்றி பேசும் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால் படத்தை பாகிஸ்தானில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு எதிராக இருக்கும் வெளிநாட்டு படங்களை வெளியிட அனுமதிப்பதில்லை.
அதனால் இப்படத்திற்கு தடை என தணிக்கை குழு உறுப்பினர் நசாக் கூறியுள்ளார். மேலும் அவர்கள் படத்தை பார்க்கவே மறுத்துவிட்டார்களாம். படத்தை பார்க்காமலேயே இப்படியா என அதிர்ச்சியாக்கியுள்ளது.

No comments

Powered by Blogger.