தாய் தந்தையின் பெயரை கையில் பச்சை குத்தி உள்ள ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது பெற்றோர்களின் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் தனது கையில் அவர்களது பெயரை பச்சை குத்தி உள்ளார் (டாட்டூ வாக வரைந்துள்ளார்.)

நேற்று தனது கையில் டாட்டு வரைந்ததாகவும், தனது பெற்றோர்களான லதா- ரஜினி மீது கொண்ட அளவுக்கதிமான பாசத்தை வெளிப்படுத்தவே இந்த டாட்டு  சென்று சவுந்தர்யா தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

கோச்சடையான் வெற்றிப்படத்தை தொடர்ந்து அடுத்த படம் ஆரம்பிப்பது குறித்து எந்த முடிவும் இன்னும் எடுக்கவில்லை என்றும், கூடியவிரைவில் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறியுள்ளார்.

ஸ்ரீகாந்தை என்னால் மறக்க முடியாது – சூர்யா

ஸ்ரீகாந்த் நடித்து, தயாரித்திருக்கும் படம் நம்பியார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்டு சூர்யா பேசுகையில், ஸ்ரீகாந்திற்கும் எனக்கும் பெரிய பழக்கமில்லை.
நெருங்கிய நட்பெல்லாம் இல்லை.ஆனால் ஸ்ரீகாந்துக்கும் எனக்கும் வேறு ஒரு தொடர்பு உள்ளது. ஸ்ரீகாந்த் ஒரு பத்திரிக்கையில் பேட்டி அளித்திருந்தார்.அவர் அப்பா சொன்னதாக கூறியிருந்தார்.
எந்த தொழில் செய்தாலும், அதில் நிறைவாக, சிறப்பாக செய்ய வேண்டும். செருப்பு தைக்கும் வேலையாக இருந்தாலும் அதில் நீ முழுமையாக, உண்மையாக உன்னை ஒப்படைத்து சிறப்பாக முதல் ஆளாக, நம்பர் ஒன்னாக வரவேண்டும்’ என்று கூறியதாக பேட்டியில் சொல்லியிருந்தார்.அது எனக்கு பெரிய ஊக்கமும், தூண்டுதலும் கொடுத்தது.
அதை அன்றே மனதில் வைத்துக் கொண்டேன். இன்றும் பெரிதும் ஊக்கம் தரும் வார்த்தைகள் அவை. அந்த வகையில் ஸ்ரீகாந்தை என்னால் மறக்க முடியாது என்று சூர்யா கூறினார்.

ஸ்டைலை மாற்றும் சமீரா ரெட்டி


ஸ்டைலை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்று அட்வைஸ் தருகிறார் சமீரா ரெட்டி.
வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சமீரா.
அதனைத் தொடர்ந்து அசல், வெடி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் தனது திரையுல மேக்கப் குறித்து கூறுகையில், எதிலும் சீக்கிரம் திருப்தி அடைய கூடாது.
வாரணம் ஆயிரம் தொடங்கி நான் நடித்த எல்லா கதாபாத் திரங்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாகவே இருக்கும். அதிலும் எனது காஸ்டியும், மேக்அப் என்று ஒரே பாணியில் இல்லாமல் மாறுபட்ட தோற்றங்களை ஏற்றேன்.
நிஜ வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் இந்த மாற்றம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
ஒரே பாணியில் உடை அணிந்து ஸ்டைலை பராமரித்துக்கொண்டிருந்த பாணியை கைகழுவிவிட்டேன்.
இப்போது சோதனை முயற்சிகளைத்தான் நிறைய மேற்கொள்கிறேன். சீக்கிரம் எதிலும் திருப்தி அடையக்கூடாது.
என்னை பொறுத்தவரை எதையும் பாதுகாப்பு கருதி குறைத்துக்கொள்ளவும் மாட்டேன். நீண்ட கூந்தல், பெரிய கண்கள், சிவப்பு லிப்ஸ்டிக், இறுக்கமான உடை இதெல்லாம் பெண்கள் கையாளும் பாதுகாப்பான ஸ்டைல்.
ஆனால் இப்படி ஒரே பாணியில் இருந்துவிடக் கூடாது. எல்லா பாணியும் எல்லோருக்கும் பொருந்திவிடாது.
நமக்கு எது பொருத்தமாக இருக்குமோ அதை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார் சமீரா.